Wednesday, February 14, 2007

கோல்ட் க்வெஸ்ட் (Gold Quest)!!! சூதாட்டமா?

தற்போது பெரும்பாலான ஐ.டி இளைஞர்கள், அதிக அளவில் பணம் சம்பாதிப்பதற்காக அதிக அளவில் ரிஸ்க் எடுத்து சேரும் திட்டம் இது. கோல்ட் க்வெஸ்ட் என்ற கம்பெனி நம்மிடம் 30ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு ஒரு தங்க நாணயம் கொடுக்கின்றனர். ஒரு பவுன் காசான இது மிகவும் மதிப்புள்ளது என்று கூறுகின்றனர். அதாவது நாணய சேகரிப்பு செய்வோர்(Numismatics) இதை பல மடங்கு விலை கொடுத்து வாங்கிக்கொள்வார்கள் என்று கூறுகின்றனர்.

அதன் பின்பு நாம் நமக்குக்கீழ் இரண்டு பேரை இத்திட்டத்தில் சேர்த்து விடவேண்டும். அதாவது அவர்களும் 30ஆயிரம் கொடுத்து சேர்ந்து ஒரு பவுன் மதிப்புள்ள தங்க நாணயம் பெற்றுக்கொள்ளலாம். நம் கீழ் சேரும் இருவரில் ஒருவர் லெப்ட் சைட் என்றும் மற்றொருவர் ரைட் சைட் என்றும் கூறுவார்கள். நாம் சேர்த்து விட்டவர்களும் அவர்கள் கீழ் யாராவது இரண்டு பேரை சேர்க்க வேண்டும். அதாவது நமது லெப்ட் பார்ட்டிலும் ரைட் பார்ட்டிலும் இவ்வாறு எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே இருக்க வேண்டும். லெப்ட் சைடில் சேரும் மூவர் மற்றும் ரைட் சைடில் சேரும் மூவர் - இவர்களுக்கக கோல்ட் க்வெஸ்ட் கம்பெனி நமக்கு 11ஆயிரத்துக்கு காசோலை அனுப்பும். எனவே நாம் நம் இரு பக்கத்திலும் சேரும் எண்ணிக்கை சமமாக இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நாம் நமக்குக்கீழ் 18 பேரை சேர்த்திருக்கும்போது (இடது பக்கம் 9 வலது பக்கம் 9) நாம் கொடுத்த 30 ஆயிரத்தை மூன்று காசோலைகள் மூலம் மீட்டு விடலாம். மேலும் நமக்குக்கீழே நபர்கள் சேரும்போது, சேரும் ஒவ்வொரு 6 பேருக்கும் 11ஆயிரம் ரூபாய்க்கு காசோலை நமக்கு வரும். இவ்வாறு எண்ணிகை அதிகரித்துக்கொண்டே போனால் ஒரு கட்டத்தில் நமக்குக் கீழ் சுமார் 150 பேர் வரும்போது வாரம் 6½ லட்சம் ரூபாய்க்கு காசோலை வரும். (அதாவது வாரா வாரம் 150 பேர் சேர்ந்து கொண்டிருந்தால்)

இதுதான் இத்திட்டத்தில் சேர்ந்தால் நமக்குக் கிடைக்கப்போகும் அனுகூலங்கலாக நம்மை சேர்த்துவிடப்போகும் நபர் கூறுபவை.

இது நேர்மையான தொழிலா? அல்லது சூதாட்டமா?

இணையத்தில் தேடிப்பார்த்தால் இருவிதத்திலும் பதில்கள் கிடைக்கின்றன.

இது தவறில்லை என்று கூறுவதற்கான வாதம்,

we are just refering someone to the company. if the person like the product and they buy it. then the company give you some commission. just that simple. and then, when that person want to join this business and expand it and feel that they can earn little checks from this company. then you already got downline. the company just offerring and wont force people coming into this business unless you want it. the company or me wont force you to buy another product unless you want it too. that is simple. cause when you want to earn money from this company, the basic step you want go through is

1) registration by paying $10 (same like applying trading licence)
2) Purchase 1UV product will cost you about $500. why have to buy? in order to activated you business
3) at least direct referral (1 left & 1 right). why? in order to qualified for the commission.

That all. by the time you reach these step. then how much you can earn in the future time is depend you now.

how much downline you can find and how much UV you can generated within yourgroup is depend on you and your group...when the company find 3UV left & 3UV right in your group in one week time...then the company will pay you $250. dont talk about the big money cause when 1st check even cannot achieve. ok

what happen if you cannot achieve 3uv left & 3UV right at the same time?
the company will maintain your sales until you can get it no matter its take you how many years.

இந்த வாதம் நேர்மையானதாகத்தான் தெரிகிறது. அதாவது நமக்குக்கீழ் யாரையும் சேர்க்க முடியவைல்லையென்றாலும் பரவாயில்லை, நமக்கு நாம் வாங்க விரும்பிய பொருள் கிடைத்து விடுகிறது. இந்த தொழிலுக்காக நாம் செலுத்திய சிறிய அளவு ரெஜிஸ்ட்ரேஷன் பீஸ் தான் நட்டம்.

ஆனால் இந்த குறிப்பிட்ட கோல்ட் க்வெஸ்ட்டைப் பொருத்தவரையில், அவர்கள் நம்மிடம் 30ஆயிரம் வாங்கிக்கொண்டு ஒரு பவுன் அள்விலான கோல்ட் காயின் கொடுக்கின்றனர். வெறும் தங்கமாக எடுத்துக்கொண்டால் அதன் மதிப்பு சுமார் 7 ஆயிரம்தான். ஆனால் கம்பெனி சொல்வது, "இந்த தங்க நாணயம் அரியது. குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் செய்வார்கள். போப், இந்து கடவுள்கள், டயானா போன்ற புகழ் பெற்றவர்களின் படங்களை அதில் எம்போஸ் செய்திருப்பார்கள். அதனால் அதன் மதிப்பு 30ஆயிரம். சிறிது காலம் கழித்து விற்றால் லட்சக்கணக்கில் கிடைக்கும்."

ஆனால் இதை வாங்கும் யாரும் இந்த நாணயத்தின் மதிப்பு அறிந்து வாங்குவதில்லை. இங்கு இதன் மதிப்பு தங்கத்தின் விலையான 7ஆயிரம் ரூபாய்தான். அப்படியும் இதை 30 ஆயிரத்திற்கு வாங்குகிறார்கள். இதேபோல இந்த நாணயம் தேவை இல்லாத இன்னும் இருவரை சேர்த்து விட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்து விடலாம் என்று இத்திட்டத்தில் சேருவாரென்றால் நிச்சயம் இது சூதாட்டம்தான்.

இந்த திட்டம் ஏதாவது ஒரு லெவலில் நின்று போனால் கடைசி 3 லெவலில் உள்ளவர்கள் நஷ்டம் அடைவார்கள். அதாவது திட்டத்தில் சேர்ந்த மொத்த நபர்களில் சுமாராக 90% பேர்கள் நட்டம் அடைவார்கள்.

உதாரணத்திற்கு நான் சேர்த்து விட்டு எனக்குக்கீழ் 8 லெவல்கள் உறுப்பினர்கள் சேர்ந்து விட்டார்கள் என்றால் எனக்குக் கீழ் மொத்தம் 510 நபர்கள் இருபார்கள். அவர்களில் 48 பேர் போட்ட பணத்தையும் அதைவிட அதிகமாகவும் எடுத்து இருப்பார்கள். 472 பேருக்கு போட்ட பணம் திரும்ப வந்திருக்காது.

At any level the plan stops, the looses will be atleast 92% of total members.
Some calculation to find the percentage of losers.

When 18 members will join below us, we can get the money what me paid to the company. (30k). This 18 ppl we can attain at the level of 3.25
(at 3rd level total members below us is 14, in the next level 4 members we need. ie, 25% of the ppl going to join in the 4th level ie 16)

1st level 2 persons joined below us. (1 left + 1 right)
2nd level 4 persons joined bleow of our 2. Total members now is 6 (3 left + 3 right)
--------
Thus, 'n'th level [2 power n] members will join
In the 'n'th level total members joined below us is,
[2 power n+1]-2
---------
So the total of last 3.75 level members are,
[2 pow n] + [2 pow n-1] + [2 pow n-2] + ([2 pow n-3] * .75) will be atleast 92% of total [2 pow n+1] members.

So whenever the company will be closed or the plan will be closed or new members not ready to join, 92% of members will lose only 8% will gain.