Monday, February 06, 2006

அறிமுகம்

நானும் களத்தில் குதித்துவிட்டேன்!!!


இலக்கின்றி எனக்கு தோன்றுவதை எழுதப்போகிறேன். அனைத்தும் எனது கருத்துதான், தவறாகவும் இருக்கலாம்.

இந்த வலைப்பூவிற்கு எதையும் ஒருமுறை என்று பெயரிட்டிருக்கிறேன். எனக்கு எந்த நிரந்தர இலக்கும் கிடையாது. ஆனால் ஒரே ஒரு வாழ்க்கைதான் கிடைத்திருக்கிறது, அதை முழுவதுமாக வாழவேண்டும் என்பதே என் கொள்கை(?).

சரி, தவறு என்று எதுவுமே இவ்வுலகில் கிடையாது. ஒருமுறை சரியாக தோன்றுவது அடுத்த முறை தவறாக தோன்றலாம். அடுத்துவர்களை பாதிக்காமல் மகிழ்ச்சியாக வாழ்வது ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோள் என்பதே என் கருத்து. அதனால் எதையும் ஒருமுறை, ஒரு கை பார்த்துவிடுவது என்று தீர்மானித்து விட்டேன். அதில் இந்த வலைப்பூவும் ஒன்று.

எது நடந்ததோ,
அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ,
அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகின்றாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும்,

கடவுள் படைப்பின் சாராம்சமுமாகும்.