நானும் களத்தில் குதித்துவிட்டேன்!!!
இலக்கின்றி எனக்கு தோன்றுவதை எழுதப்போகிறேன். அனைத்தும் எனது கருத்துதான், தவறாகவும் இருக்கலாம்.
இந்த வலைப்பூவிற்கு எதையும் ஒருமுறை என்று பெயரிட்டிருக்கிறேன். எனக்கு எந்த நிரந்தர இலக்கும் கிடையாது. ஆனால் ஒரே ஒரு வாழ்க்கைதான் கிடைத்திருக்கிறது, அதை முழுவதுமாக வாழவேண்டும் என்பதே என் கொள்கை(?).
சரி, தவறு என்று எதுவுமே இவ்வுலகில் கிடையாது. ஒருமுறை சரியாக தோன்றுவது அடுத்த முறை தவறாக தோன்றலாம். அடுத்துவர்களை பாதிக்காமல் மகிழ்ச்சியாக வாழ்வது ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோள் என்பதே என் கருத்து. அதனால் எதையும் ஒருமுறை, ஒரு கை பார்த்துவிடுவது என்று தீர்மானித்து விட்டேன். அதில் இந்த வலைப்பூவும் ஒன்று.
எது நடந்ததோ,
அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ,
அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகின்றாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும்,
கடவுள் படைப்பின் சாராம்சமுமாகும்.
Monday, February 06, 2006
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நல்லா இருக்கு மச்சி...!!
வாழ்த்துக்கள்...!!!
முழுமையாக அந்த வாழ்க்கையை வாழுங்கள்
யாருக்கும் தொந்தரவு இன்றி ( பின்னே ஏன் வலைப்பூ ஆரம்பிச்சிங்கன்னு கேட்கவில்லை)
அட அடைப்புக்குறிக்குள் இருப்பது நான் கேட்கலைப்பா..என்னுடைய மனசாட்சி..
புதிதாக வலைப்பூவிற்குள் நுழைந்திருக்கின்ற தங்களுக்கு வாழ்த்துக்கள். கலகலப்பாக தங்களது பதிவை ஆரம்பியுங்கள்..
வாங்க வாங்க அமர்க்களபடுத்த வாழ்த்துக்கள்
என்னங்க தேதி Feb 06 2006 காட்டுது. அன்னிக்கு எழுத ஆரம்பித்தை இன்னிக்கு தான் முடித்திற்களா...?
இருந்தாலும் ரொம்ப தான் பொருமையாக எழுதுறிங்க.
வலைப்பதிவு உலகத்திற்கு வரவேற்ற நண்பர்களுக்கு நன்றி. :D
//முழுமையாக அந்த வாழ்க்கையை வாழுங்கள்
யாருக்கும் தொந்தரவு இன்றி ( பின்னே ஏன் வலைப்பூ ஆரம்பிச்சிங்கன்னு கேட்கவில்லை)//
நிலவு நண்பரே, தேமேவென்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் வாழ்க்கையை ரசித்து அனுபவிக்க வைப்பதை ஒருமுறை செய்து விட வேண்டுமென்று எனக்கு ஆசை. ;)
நல்ல Blog ஆக இது அமையா வாழ்த்துக்கள்!!!!
Post a Comment