நாளை நடை பெறும் அறுவை சிகிட்சைக்காக இந்த ரத்த வகை இவ்வளவு தேவை என்று குறுச்செய்தி அல்லது மெயில்கள் நமக்கு அடிக்கடி வரும். என் நண்பர்கள் சிலரும் அப்படி வரும் ரத்த தான கோரிக்கைகளுக்காக் முன்பின் தெரியாதவர்களுக்குக் கூட ரத்தம் கொடுத்துள்ளனர்.
அப்படி ரத்ததானம் கோரிய ஒருவரிடம், சம்பத்தப்பட்ட மருத்துவமனையின் ரத்த வங்கியில் அந்த ரத்தம் இல்லையா, இது ஒன்றும் அரிய வகை ரத்தம் இல்லையே என்று கேட்டபோது, ரத்தம் வங்கியில் உள்ளது ஆனாலும் அங்கே வாங்கினால் அதற்கும் பணம் கேட்பார்கள் என்று கூறினார்.
என்னுடைய சந்தேகம் என்னவென்றால், இப்படி ரத்த தானம் கோரி உதவி கேட்பது, ரத்தம் கிடைப்பது கடினம் என்பதால் அல்ல, ரத்த வங்கியில் வாங்கினால் செலவாகும், தானாமாக வேறோருவரிடம் பெற்றால் செலவில்லை என்பதுதான் காரணமா?
அப்படியானால் ரத்தம் வேண்டுபவர் அதற்காக மருத்துவமனைக்கு பணம் செலுத்தக்கூடிய அளவிற்கு வசதிபடைத்தவராக இருந்தும், அவரது செலவைக்குறைப்பதற்காக மட்டுமே நாம் ரத்த தானம் செய்வது அவசியமா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.
அரசு மருத்துவமனைகளில் ரத்த தானம் செய்து, அது அவசர தேவைக்காக இலவசமாகத்தான் கொடுக்கப்படுகிறது என்பதால் அதில் பிரச்சனை இல்லை. இது முன்பின் தெரியாத தனிப்பட்ட நபரின் தேவைக்கு ரத்தம் கொடுப்பது பற்றி மட்டுமே.
ரத்த தானம் பற்றி தெரிந்தவர்கள் விளக்கினால் தெளிவு பெற வசதியாக இருக்கும்.
Friday, December 22, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
எனது மாமனாருக்கு ரத்தம் தேவை பட்ட போது மருத்துவமனை பரிந்துரைத்த ரத்த வங்கிக்கு சென்று காசு கொடுத்து ரத்தம் வாங்கினாலும் அவர்கள் அதற்க்கு ஈடாக வேறு இருவர் ரத்தம் கொடுக்க ஏற்பாடு செய்தால் மட்டுமே தர சம்மதித்தார்கள்.
இந்த மாதிரி சூழல் கூட இருக்கிறது என்ன செய்வது...
அதுவும் மாதம் ஒருமுறை ரத்த மாற்றம் செய்யும் நிர்பந்தம் இருந்தது.
இது பற்றி தெரிந்தவர்கள் யாருமே இங்கு இல்லையா?
வணக்கம் ரியோ!
முதலில்,ரத்த தானம் என்பது மனிதநேய அடிப்படையிலான ஒரு விஷயம்! இதில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமில்லை.
உங்கள் நண்பர் சொன்ன காரணம் சரியல்ல, ஏனென்றால், தனியார் மருத்துவமனையில் ரத்தம் வாங்கினாலும் சரி, நாமே கொடுத்தாலும் சரி அவர்கள் கட்டணம் வசூலிப்பார்கள். அந்த பணம் ரத்தத்திற்கான விலை அல்ல. அதை சேகரிப்பதற்கும், சோதனை செய்வதற்கும், பத்திரப்படுத்தி உங்களிடம் கொடுப்பதற்கும் ஆகும் செலவேயாகும்.
மேலும், நம் நாடடை பொறுத்தவரை, ரத்தம் என்பது பற்றாக்குறையான பொருளாகவே உள்ளது. இங்கு குடும்பம், மற்றும் நண்பர்களின் தேவைக்காக மட்டுமே தானம் செய்கிறோமே தவிர, அதை வாடிக்கையாக நாம் செய்வதில்லை. இதற்கு அதைப்பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணமாகும்!
உடல் ஆரோக்கியமாக உள்ளவர் யாரானாலும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்! நீங்களும் செய்யுங்கள்! தெரிந்தவர்களுக்கும் இதனை சொல்லுங்கள்!
சுமார் பத்து தடவை ரத்தம் கொடுத்தவன் என்கிற முறையில், எனக்கு தெரிந்த வரைக்குமான விளக்கம் தர முயற்சித்துள்ளேன். பிழையிருந்தால் பொறுத்துகொள்ளவும்.
நன்றி!
Post a Comment