Wednesday, October 18, 2006

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு...

பிடித்த மதுவகைகள் பற்றி தமிழ்நாடு டாக்-ல் அரட்டையடித்திருந்தோம், உங்களுக்கெல்லாம் மிகவும் உபயோகப்படுமென்பதால் அதை தொகுத்து வழங்குகிறேன். ;)

(சின்னப்பசங்களும், திருமணம் ஆனவர்களும் படித்து, ஏங்க வேண்டாம்.)

ஆனந்த்:
ஷூட்டர்ஸ் என்று ஒரு வகை மது பார்களில் கிடைக்கும் முயற்சி செய்திருக்கிறீர்களா? (டகீலா மாதிரிதான்)

நானும் விஸ்கி, ரம், பிராந்தி, ஜின், காக்டைல், வோட்கா, பாரின் சரக்கு லோக்கல் சரக்குன்னு பலதை முயற்சி செதுட்டேன்.. ஆனால் ஈஸ்ட் ஆர் வெஸ்ட் பீர் இஸ் பெஸ்ட்

பீரில் ஸ்காட்லந்தில் கிடைக்கும் டென்னெட்ஸ் என்னுடைய பேவரைட்

நான் இருக்கும் ஸ்காட்ல்ந்தில்தான் ஸ்காட்ச் விஸ்கி தயாரிக்கப்படுகிரது, இங்கிருந்துதான் உலகம் முழுதும் போகுது, இங்கு "Famous Grouse" ஸ்காட்ச் விஸ்கி கிக்கும் கூட விலையும் கையை கடிக்காது

சிவப்பு ரம் பிரியர்கள் கண்ட ரம்மை முயற்சி செய்யாதீர்கள், மேற்கிந்திய தீவுகளில் (குறிப்பாக ஜமைக்கா) வில் தயாரிக்கப்படும் "Black Heart" முயற்சி செய்யுங்கள்

வைட் ரம்மென்றால் பகார்டி, பகார்டி என்றால் வைட் ரம்.. அதை அடிக்க வைட் ரம்மில் ஆள் இல்லை

அதே போல

வோட்கா என்றால் ஸ்மிரின்னாப், ஸ்மிரினாப் என்றால் வோட்கா

பிராந்தியில் மிகவும் அருமையானது மார்டெல்தான்

வைனை இங்கே தண்ணி போல குடிக்கிறார்கள் எனக்கென்னவோ வைன் பிடிக்கவில்லை

நான் ஷாம்பெயின் சில பார்ட்டிகளில் குடித்துள்ளேன்.. அதுவும் வைனைப்போலத்தான் சுவை ஆனால் அதில் பீரைப்போல நுரை வரும். கிக்கும் கொஞ்சம் அதிகம்..விலை மிக மிக அதிகம்..

அதனாலேதான் ஷாம்பெயினை நான் வாங்குவதில்லை, பார்டிகளில் ஓசியாக குடுத்தால் மட்டும் குடிப்பது

என்னடா இவ்வளவு சொன்றேன்னு எனை மொடாக்குடியன்னு நினைச்சுடாதீங்க. .. நான் மாதத்திற்கு எக்காரணம் கொண்டும் ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு தடவை மேல் குடிப்பதில்ல என்ற கொள்கையே வைத்திருக்கேன்

ரியோ:
எனது தேர்வு, ட்ராட் பியர்தான். அல்லது கிங்பிஷர் சூப்பர் ஸ்ட்ராங்.

வைன் குடித்தால் தோல் பளபளப்பாக மாறும் என்று சொல்வார்கள். உண்மையா?
மற்றபடி நீங்கள் சொல்லும் ப்ராண்ட்கள் இங்கு டாஸ்மாக்கில் கிடைக்காது என்று நினைக்கிறேன்.

சென்னையில் சவேராவின் பேம்பூ பாரும், ரெஸிடன்ஸியின் பைக் அண்ட் பேரல்ஸ் ட்ரை செய்து பாருங்கள்.

கள்ளு ட்ரை செய்ததில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்

ஆனந்த்:
உண்மைதான், உண்மையிலேயே வைன் உடலுக்கும் தோலுக்கும் நல்லது, இதயத்திற்கும் நல்லது..

ஆனால் வெளிநாட்டு காரர்கள் குடிப்பத்ற்கும் நம் குடிமகன் குடிப்பதற்கும் வித்தியாசம் உண்டு

இங்கு முழு சாப்பாட்டை சாப்பிட்டு முடித்த பின்தான் வைன் குடிப்பார்கள், அதிகம் குடிக்க மாட்டார்கள், இரண்டு கப்புக்குமேல் போகாது. சாப்பிட்ட பின் குடிப்பதால் அது குடலை பாதிப்பதில்லை

ஆனால் நம் குடிமகன் சாப்பாட்டுக்கு முன்தான் குடிப்பான், கிக்கு தலைக்கேறும் வரை குடித்துக்கொண்டே இருப்பான். வெறும் வயிற்றில் குடிக்க கூடாது, அது குடலுக்கு கெட்டது

லக்கிலுக்:
டகீலா ஒரே ஒரு முறை ட்ரை செய்திருக்கிறேன்.... அது வேறொன்றும் ஒஸ்தி சரக்கில்லை.... நம்ம ஊருல நாட்டுச்சாராயம் மாதிரி மெக்ஸிகோவின் நாட்டுச் சாராயம்.... சும்மா சுர்ருன்னு இருக்கும்.....

வைன் எல்லாம் லேடீஸ் ட்ரிங்க்மா.... அதுபோல தான் ஜின்னும்......

Kundu:
பியர்:
பியரில் இருவகை, ஏல், லகர். இதில் ஏல் கருமையாகவும் கசபபாகவும் இருக்கும் (ஸ்ரவுட் இந்த வகைதான்), எனக்குப் பிடித்தது லகர் வகை பியர்கள்.
பியரில் முக்கியமாக பார்க்கவேண்டியது அல்கோல் விகிதம். அனேகமான 4%லிருந்து 9% வரை இருக்கும் (சிலவற்றில் 10%க்கும் கூடுதலாக இருக்கலாம் - அது வியாபாரத்திற்க்காக).
எனது தெரிவு 5.6% to 6% அலக்ககோல் உள்ள லகர் வகையை சேர்ந்த பியர்.

பிராண்டி:
இதில் எனது தேர்வு ரமி மார்ட்டிலில்தான், பிராண்டியுடன் ஸ்பிரைட் (sprite)ம் ஐசும் (ஐய்வர்யா இல்லை ice) கலந்து குடித்தால் அமிர்தம்.

ஸ்காட்ச்:
இதில் எனது தெரிவு சிவாஸ் ரீகல் (12 years old). இதற்க்கு ஏதும் கலக்காது ice மட்டும் போட்டுக் குடிக்கவேண்டும், வேண்டுமாயின் சிறிது soda water கலக்கலாம்.
அடுத்ததாக ஜோனி வாக்கர். இதில் 5வகையுண்டு, ரெட் லேபல் (சாதாரணமானது) பிளக் லேபல் (12 years old), கிரீன் லேபல் (15 years old), கோல்ட் லேபல் (18 years old) அத்துடன் பிளு வேபல் (வித்தியாசமான முறையில் வடிக்கப்பட்டது). லேபலுக்கேற்ப விலையும் அதிகம்.
இதில் எனது தெரிவு பிளக் லேபல் (உண்மையை சொன்னால் மற்றவை குடிக்க பொருளாதாரம் இடம் தராது). வாழ்க்கையில் ஒரே ஒருமுறை அபீஸ் பார்ட்டில்யில் புளூ லேபல் ருசி பார்த்தேன்.

ரம்:
இதிலும் இரு வகை, வைற் ரம், டாரக் ரம்.
வைற் ரம்: பேட்ரியாட் சொன்னமாதிரி இதில் எனது தேர்வு பக்காடி தான், இதனை ஆரஞ்சு ஜூஸுடன் கலந்து குடிக்கவேண்டும் அல்லது ஸ்ராபரி ஜீஸ்.
டார்க ரம்: Always rum and coke இது எனது தாரக மந்திரம், இதில் எனது தெரிவு Havana CLub (12 years old). இதிலும் பேட்ரியாட் சொன்ன மாதிரி கண்டதை முயற்சி செய்ய வேண்டாம் அவை குதிரைக்களுக்குதான் நல்லது மனிதர்களுக்கல்ல.

வொட்கா/ஜின்:
இவற்றுடன் லெமன் கோடியல் கலந்து குடியுங்கள். இவை மணம் குறைந்தவை. இவற்றை அடித்து விட்டு வீட்டிற்க்கும் செல்லாம் பிடிபட மாட்டீர்கள் (உளறினால் அல்லது ஹெல் மட்டை வாசல் படியிலும் செருப்பை பீரோவிலும் வைத்தால் நான் பொறுப்பல்ல)

வைன்/ஸாம்பெயின்:
வைன் எனக்கு பிடிக்காது, இதில் எனக்கு அதிக அனுபவமும் இல்லை.
ஸாம்பெயின்: எதாவது பார்ட்டிகளில் முதலில் உடைத்து சிறிது குடித்து விட்டு, மற்ற குடிகளுக்கு தாவி விடுவேன்.

சாராயம்:
இதில் இலங்கையை சேர்ந்த (VSOA - Very Spcial Old Arrack) ஐ ஒருவரும் அடிக்கமுடியாது. இலங்கையில் இருக்கும் போது சிறுவயது இதைக் குடிக்க முடியவில்லை.
இங்கு வந்த பின் இது பற்றி கேள்விப்பட்டு, இலங்கை சென்ற நண்பர் மூலம் எடுத்து அருந்தினேன், தன்யன் ஆனேன். இதன் இளநீருடன் சேர்த்து அருந்த வேண்டும்.

மில்லி/கசிப்பு:
ஒருமுறை 100 மில்லி வாங்கி 1000 மில்லி தண்ணீருடன் சேர்த்து குடித்தேன். அதன் காரம் இன்னும் தீரவில்லை.


OK, ஒரு சின்ன tip:
மது வகை குடித்தால் மறு நாள் தலையிடி, வாந்தி போன்ற உபாதை இருக்கும் (கர்ப்பம், இரவு குடியிலிருக்கும் போது யோரோ என்னவோ செய்து விட்டான் என பயப்பிடாதீர்கள்) இது சாதாரண hang-over தான், இதை தவிர்க்க இரவில் நன்றாக தண்ணீர் அருந்துங்கள், hang-overக்கு காரணம் dehydrationதான். அல்லது காலையில் எழுந்தவுடனே ஒரு பெக் சாப்பிடுங்கள் (ஒரு பெக் மட்டுதான்) இதை தெளிவடி என்று கூறுவார்கள்.



இதுவெல்லாம் எனது சொந்த அனுபவம், கல்யாணத்திற்க்கு முன்....

இப்போது தண்ணிதான்(H2O) இடையிடையே கொஞ்சம் தண்ணி (அல்ககோல்).

மேலதிக விபரங்களுக்கு PM செய்யவும்.....

இதை எழுதும் போது கொஞ்ச மில்லி அடித்துவிட்டுத்தான் எழுதுகின்றேன். ஞாபகமிருக்கட்டும்
குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு.

thayirsadam:
ஒரு காலத்தில், குடிப்பவர்களையும், குடிப்பழக்கம் உள்ளவரையும், நம் தமிழ் சமூகம் தாழ்வாகப் பார்த்தது..

மதுவிலக்கு என்பது ஒரு தீவிர சமூக இயக்கமாக இருந்தது... அதுவும் ஈ வே ரா, தி.க மற்றும் காங்கிரசு இயக்கங்களின் பாதிப்பால் படித்தவர், மது அருந்துவதை பெரிய அளவில் தவிர்த்தனர்...

ஆனால் இப்போது நம் தமிழக சமூகம் எவ்வளவு மாறியுள்ளது.... இன்று படித்தவர்களே அதிகமாக குடிமகன்களாக, மோடாக்குடியர்களாக இருக்கின்ற்னர்

குடிக்காதவர்களை, அதுவும் இள வயது ஆண்கள் குடிக்காதவர்களாக இருந்தால் ஏளனமாக பார்த்து படித்தவரே கேலி செய்கின்றனர்..

ஒரு காலத்தில் மதுவிலக்கில் தீவிர ஆற்வம் காட்டியது பெண்கள்.. இப்பொது சம உரிமை கோரி பெண்களே அதுவும் படித்த பெண்களே குடிக்கின்றனர்...

சமுதாய, இடது சாரி, மற்றும் சமூக நீதி சிந்தனையுள்ள அறிவுஜீவிகளும் மகிழ்ச்சியுடன் குடிக்கின்றனர்..

20 - 30 ஆண்டுகளில் எந்த அளவு சமூதாயம் மாறியுள்ளது என்பதை எண்ணி வியப்பாக இருக்கிறது.

3 comments:

பெத்தராயுடு said...

சமீபத்துல "1800" அப்படின்னு ஒரு tequila வாங்கிட்டு வந்தோம். 4 ஷாட், 5 ஷாட் சரளமா அடிச்சோம். மேலும் மறுநாள் hangover பிரச்சினையே இல்ல.

I like it.

SP.VR. SUBBIAH said...

கண்ணதாசன் இதற்கும் ஒரு பாட்டு எழுதிவைத்துள்ளார்
குடிமகன்களுக்கு உதவும் நோக்கத்தில் அதைக் கீழே கொடுத்துள்ளேன்

விஸ்கி வித் வாட்டர்
ப்ராண்டி வித் சோடா
ரம் வித் கோலா
ஜின் வித் லெமன்
மென் வித் உமன்

Anonymous said...

குடிப்பவர்கள் எல்லாம் குடிகாரர் இல்லை ஆனால் குடிகாரர் எல்லாம் குடிப்பவகர்கள்!
என்ன்ய்யா சொல்ரே என்றால் உங்களால் ஒன்று இரண்டுடன் நிறுத்த முடியுமா.எத்தனை முறை நினைவு இழந்துள்ளீர்கள்,வேண்டாம் என்று இருந்துவிட முடியுமா,குடிக்காக ஏங்குகிறீர்களா,மன பண வேலை குடும்பத்தொந்தரவுகள் உண்டா,குடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று யாரும் சொல்லியிருக்கிறார்க்ளா?
இவற்றிக்கு மனதார உண்மை பதில் சொல்லுங்கள்.குடி சிலருக்கு ஒரு மனநோய்.ஆரம்பதிலேயே கவணித்து அடக்காவிட்டால்் ஆளையே மெல்ல மெல்ல ஆனால் நிச்சயமாகக் கொன்றுவிடும்.நண்பர்கள் தான் இதைமுக்கியமாகக் கவனித்து உண்மைக் குடிகாரர்களைக் காப்பாற்ற வேண்டும்.இல்லையேல் அவரும் அவருடைய குடும்பமும் அடையும் இரகசியப் புற்றுநோய் அனைவரையும் வாட்டிவிடும்.